பதிவு செய்த நாள்
28
மார்
2016
12:03
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. உடுமலை, முத்தையாபிள்ளை லே-அவுட்டில் உள்ள, சக்தி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மூலவர் சக்தி விநாயகருக்கு, கணபதி ஹோமம், உற்சவமூர்த்தி பால விநாயகருக்கு, அனைத்து அபிஷேகங்களும், கலசாபிஷேகமும் நடந்தது.மூலவர் வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது. பாலவிநாயகர் திருத்தேரில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை, ஜி.டி.வி.லே-அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் முருகன், பெருமாள், தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சன்னதிகள் அமைந்துள்ளன.சங்கடஹர சதுர்த்தியையொட்டி, செல்வ விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தீபாலபட்டி சக்தி விநாயகர் கோவில், ஜல்லிபட்டி சர்வசித்தி விநாயகர் கோவில், கணியூர் ஸ்ரீராமபட்டிணம் சித்தி விநாயகர் கோவில், போடிபட்டி காரியசித்தி விநாயகர் கோவில் ஏரிப்பாளையம், சேகர்புரம் சக்தி விநாயகர் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.