வானுார்: தென்சிறுவளூரில் பூரணி பொற்கலை அய்யனாரப்பன் சாமி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வானுார் ஒன்றியம், தென்சிறுவளூர் கிராமத்தில் புதியதாக கட்டியுள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு வினாயகர் பூஜை, தொடர்ந்து லட்சுமி பூஜை நடந்து.கிளியனுார் அகதீஸ்வரர் சிவன் கோவில் அர்ச்சகர் தலைமையில், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் பூரணி பொற்கலை அய்யனாரப்பன் சாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர் நடராஜன், கிராம நாட்டாண்மைகள், வார்டு உறுப்பினர்கள்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.