பதிவு செய்த நாள்
29
மார்
2016
12:03
மாதவரம் : புனித செபஸ்தியார் ஆலயத்தின், 64ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதவரத்தில் உள்ள, புனித செபஸ்தியார் ஆலயத்தின், 64ம் ஆண்டு தேர் திருவிழா, நேற்று முன்தினம் மாலை துவங்கியது. ஆலய பங்கு தந்தை சைமன் தலைமையில், அருட்பணி ஆனந்தராஜ், ஆனந்தசாமி ஆகியோர் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர். பின், ஆலய விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டினர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், வண்ண பலுான்களை பறக்க விட்டு, மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.அதைத் தொடர்ந்து, சிறப்பு ஆராதனை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. வரும், 2ம் தேதி மாலை, தேர் திருவிழா நடக்க உள்ளது.