அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருவிழா குறித்து ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2016 12:03
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாத தேர்த்திருவிழா நடக்கிறது.இந்தாண்டு தேர்திருவிவையொட்டி புதிய தேர் சகடை செய்தல், பஞ்சமூர்த்தி வாகனங்களை புதுப்பித்தல் குறித்து உபயதாரர்கள் சார்பில், கடந்த மாதம் அறநிலைத் துறையினருக்கு மனு அனுப்பினர். அதைத்தொடர்ந்து அறநிலைத்துறை செயல்அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் தமிழரசி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்தில், தேரோடும் வீதியில் மாடத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தேர் சகடை புதிதாக செய்தல், பஞ்சமூர்த்தி வாகனங்களை புதுப்பித்தல், கோவிலை சுற்றி புணரமைப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தெரிவித்தனர். அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.