பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2016 11:04
கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில், குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோபி அருகே கணக்கம்பாளையத்தில், பிரசித்த பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம், 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. சுண்டக்கரடு, வேதபாறை, கொண்டையாம்பாளையம், கணக்கம்பாளையம், எரங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.