நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
பூஜையையொட்டி, காலபைரவருக்கு பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கணக்கர் சரவணன் கவுன்சிலர் கலியபெருமாள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.