மகாராஷ்ட்டிரா சனி பகவான் கோயிலில் பெண்கள்; பதட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2016 03:04
மும்பை: மகாராஷ்ட்டிரா சனி பகவான் கோயிலில் கோர்ட் உத்தரவுப்படி நுழைய பேரணியாக பெண்கள் புறப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் வன்முறை வெடிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. சிங்னாபூர் பகுதியில் பிரபல சிவன் கோயில் உள்ளது. இங்கு கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஆண், பெண் என பிரித்து பார்க்க வேண்டாம், அவர்களது உரிமை பாதிக்கக் கூடாது. எனவே கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. மேலும் மாநில அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏப்., 2 பெண்கள் அமைப்பினர் பேரணியாக கோயில் நோக்கி புறப்பட்டு வந்தனர். இந்த பேரணிக்கு திரிபாதி தேசாய் என்ற பெண் தலைமை வகித்து அழைத்து வந்தார். இதற்கிடையில் கோயில் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இக்கோயிலில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலையில் அக்கோயில் மூடப்பட்டது.