பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
ஈரோடு: முனிசிபல் சத்திரம் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி சுமந்து நேற்று ஊர்வலம் சென்றனர். ஈரோடு நேதாஜி ரோடு, முனிசிபல் சத்திரத்தில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 23ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, கங்கணம் கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஏராளமான பக்தர்கள் வேல் அலகு, காவடி அலகு, கத்தி அலகு, திருவாச்சி அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை அக்னி கவாளம் எடுத்து நகர்வலம் வருதல் நடக்கிறது. மறுநாள் (6ம் தேதி) குண்டம் இறங்குதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.