பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
12:04
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி வடகாட்டுப்பாளையம் நாட்டராயன் சுவாமி கோவில் பொங்கல் திருவிழா, கடந்த, 1ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 6ம் தேதி மாலை பெருந்தலையூர் வாணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், 7 ம் தேதி காலை, 10.30 மணிக்கு அம்மை அழைத்தலும், பொங்கல் வைத்தலும் நடக்கிறது. மதியம், 2 மணிக்கு பெரும் பூஜையுடன் பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 8 ம் தேதி காலை, 8 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மாலை, 4 மணிக்கு மறுபூஜையும் நடக்கிறது. பாம்பாட்டி சித்தர் இத்தலத்தில் வந்து தங்கியதாக ஐதீகம். விஷ ஜந்துக்கள் கடித்தால், இக்கோவிலில் வேப்பிலை பாடம் போட்டு சென்றால் குணமடைவது நம்பிக்கை. நல்ல காரியங்களுக்காக, இங்கு வந்து கவுலி வாக்கு கேட்டும் மக்கள் செல்வர்.