ராமநாதபுரம்: குயவன்குடி சீரடி சாய்பாபா கோயிலில் வரும் 14, 15ல் ஸ்ரீராம நவமி விழா நடக்கிறது. இரு நாட்களும் காலை 6.30 மணிக்கு ஆரத்தி, 8 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, மதியம் 12 மணிக்கு ஆரத்தி, ஒரு மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மாலை6 மணி, இரவு 8 மணிக்கு ஆரத்தி நடக்கிறது. ஏப்., 14 காலை 9 மணிக்கு அகண்ட பாராயணம் துவங்கி 15 காலை 9 மணிக்கு நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாய் ஆச்சார்யா தியான மந்திர் நிர்வாகிகள் செய்துள்ளனர்.