மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், வரும், 16ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.நாடு முழுவதும், 108 வைணவ திருத்தலங்களில், 63வது தலமாக விளங்கும் இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலின் பிரசித்தி பெற்ற உற்சவமான சித்திரை பிரம்மோற்சவம், 16ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல், தினமும் உற்சவங்கள் நடைபெறும்.