பதிவு செய்த நாள்
11
ஏப்
2016
01:04
காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த ஏப்.1-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.
மூன்றாம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பத்தாம் நாளான நேற்று காலை 6 மணிக்கு மேல் கீழ ஊரணி கணேசன் கோயிலிலிருந்து பால்குடம் மற்றும் வேல்காவடி எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து கரகம், மது, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலை சென்றடைந்தனர். இன்று மாலை 6 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் காளிதாசன், செயலாளர் சிங்கமுத்து, பொருளாளர் பால்வண்ணசாமி செய்திருந்தனர். பூஜாரிகள் சீனிவாசன், கார்த்திகேயன் பூசைகளை மேற்கொண்டனர்.
பால்குட ஊர்வலம்: காரைக்குடி பாப்பா ஊரணி ராமலிங்க சவுடாம்பிகை கோயில் பங்குனி பொங்கல் பிரம்மோற்சவ விழா, ஏப்., 5 காப்பு கட்டுடன் துவங்கியது.
தினமும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு முத்தாலம்மன் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம் நடந்தன. ஏற்பாடுகளை தேவாங்கர் மகாஜன சபைத் தலைவர் கதிர்வேல், செயலாளர் சங்கரமூர்த்தி, பொருளாளர் ராஜசேகரன் செய்திருந்தனர்.