பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
11:04
நாகர்கோவில்: சித்திரை 1ம் தேதி, தமிழ் வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இது விஷு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில், சுசீந்திரம் தாணுமாலையர் சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், கனி காணும் நிகழ்ச்சி, நாளை அதிகாலை நடைபெறுகிறது. சபரிமலையில், விஷு விழாவுக்காக, நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும் போது, அய்யப்பன் விக்ரகம் முன், காய் கனிகள் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தொடர்ந்து தந்திரியும், மேல்சாந்தியும், பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவர்.