திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கற்பக விருட்ச, கமல வாகன வீதியுலா நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.,10ல் துவங்கியது. நேற்று முன்தினம் நந்திகேசுவரர் வாகன வீதியுலா, அம்மனின் சிம்மவாகனம் வீதியுலா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தன. மாலை விஸ்வ பிராமண சமூகத்தார் மண்டகப்படியில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட கற்பக விருட்ச, கமல வாகனத்தில் பத்மகிரீஸ்வரர், பிரியாவிடைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், நான்கு மாடவீதிகளில் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.