மானாமதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2016 11:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலய சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மானாமதுரையில் சித்திரை திருவிழா விமரிசையாக பத்து நாட்கள் நடைபெறும். ஆனந்தவல்லியம்மன் கோயிலில் திருப்பணி நடந்து வருவதால் தற்காலிக கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்பாளும் சுவாமியும் சிறப்பு அலங்கார கோலத்தில் எழுந்தருளினர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் கற்பூர பட்டர் கொடியேற்ற வைபவத்தை நடத்தி வைத்தார். கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன.காலை 8.40 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெய்வசிகாமணி பட்டர், குமார் பட்டர்,தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.19ம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாணம், 20ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம்,22ம் தேதி வீரஅழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெற உள்ளது.