பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
01:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் காலை 9:30 - 10:00 மணிக்குள் கொடியேற்றம், மாலை 5:00 மணிக்கு புண்யாகவாசனம், ரட்சாபந்தனம், யாக சாலை துவக்கம், 6:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்துடன் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தன. 19ம் தேதி காலை 9:00 மணிக்கு, மோகினி அலங்காரத்தில் வீதி உலா, மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கின்றன. வரும் 20ம் தேதி காலை 9:00 மணிக்கு, வெண்ணெய் தாழி அலங்காரத்திலும், மாலை 6:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடக்கின்றன. வரும், 21ம் தேதி காலை 7:30 - 9:00 மணிக்குள், தேர் வடம் பிடித்தல், மாலை 6:00 மணிக்கு திருவீதியுலா, 22ம் தேதி காலை 6:00 மணிக்கு, தீர்த்தவாரி, மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கின்றன. 23ம் தேதி, விடையாற்றி நிகழ்ச்சியுடன், விழா நிறைவு பெறுகிறது.