பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
02:04
சுக்கிரன் பக்கபலமாக இருப்பதால் பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். செவ்வாயும், புதனும் வக்ரத்தில் சிக்குகினாலும் அதே ராசியில் இருப்பதால் கெடுபலன் தர மாட்டார். சுக்கிரனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். சூரியன் 9 ல் இருப்பதால் மதிப்பு எதிர்பார்த்த படி இருக்காது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும். வயிறு பிரச்னை ஏற்படலாம். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை.
தொழில், வியாபாரம் சிறப்படையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். அரசு வகையில் இருந்த சிரமம் மறையும். ஏப். 29,30 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறாமல் போகலாம். பணியிடத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மே 8,9ம் தேதிகள் நன்மையான நாட்களாக அமையும்.
கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் காண்பர். தடைபட்ட ஒப்பந்தம் மீண்டும் கிடைக்கும். சிலருக்கு பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் சுமாரான பலன் பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உருவாகும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். கோதுமை, பழவகைகள் போன்றவற்றில் விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.
பெண்கள் சிறப்பான நிலை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். மே 1,2 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் உதவிகரமாக இருப்பர்.
நல்ல நாள்: ஏப். 14,17,18,22,23,29,30, மே 1,2,8,9,10,11
கவன நாள்: மே 3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்: 5,6 நிறம்: வெள்ளை
வழிபாடு: செவ்வாயன்று முருகனை வழிபட்டால் நன்மை உண்டாகும். தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யுங்கள். பசுவுக்கு புல், பழம் கொடுங்கள்.