சிதம்பரம்: கடலுார் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம நவமி விழா சிதம்பரம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதனைö யாட்டி மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ராமர் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் ராமர் பட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஜோதி குருவாயூரப்பன் தலைமை தாங்கினார். சேவை பிரிவு செயலர் டாக்டர் ஜெ யமுரளி வரவேற்றார். இந்து முன்னணி மாநில பொருளாளர் கேசவ பெருமாள் ராமநவமி உரையாற்றினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பேராசிரியர் கார்த்திகேயன், பஜ்ரங்தள் நகர தலைவர் குருமூர்த்தி, தண்டபாணி, அருள், நாராயணன், கோபிநாத், ரமேஷ், ஓதுவார் பாலசுப்ரமணியன், புரு ேஷாத் தமன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.