குன்னுார்:குன்னுார் அருகே காட்டேரி அணை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்டம் நடந்தது. குன்னுார் காட்டேரி டேம் அருகே செலவிப் நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 21வது ஆண்டு திருவிழா கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை,11:30 மணிக்கு அலங்கார பூஜை, மாலை, 4:30 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தன. நேற்று காலை அலகு குத்துதல், தீச்சட்டி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மதியம்,1:00 மணிக்கு துவங்கிய பூகுண்டத்தில், குழந்தைகளை சுமந்து கொண்டு தாய்மார்கள் குண்டம் இறங்கியது பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தேர் ஊர்வலம் நடந்தது.