கடலுார்: கடலுார் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. கடலுார், புதுப்பாளையத்தில் அமைந்துள்ள தரைகாத்த காளியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா குழுவினரின் 26ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வரும் 21ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 5:30 மணிக்கு கணபதி ேஹாமம், 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம், 10:00 மணிக்கு பால்குட அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11:30 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு அன்னதானம், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா, 10:30 மணிக்கு சித்ரா பவுர்ணமி சிறப்பு அபிஷேகம், 12:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.