பதிவு செய்த நாள்
20
ஏப்
2016
12:04
திருப்பதி : பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை, திருப்பதி தேவஸ்தானம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, ஓராண்டு முழுவதும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், 1,000 கிலோவை தாண்டி வருகிறது. 2015 - 16ல், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 1,311 கிலோ தங்கத்தை, தேவஸ்தானம், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 1.75 சதவீத வட்டியில், 3 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்து உள்ளது.வங்கியின் முதன்மை அதிகாரி, இதற்கான ஒப்புதல் பத்திரத்தை, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவராவிடம் ஒப்படைத்தார்.