நாககன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 01:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, ரயில்வே காலனி நாககன்னியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடaுகள் நடைபெறுகின்றன. இன்று காலை, 7:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், 10:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வர செல்லுதல், நாளை காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷகம், 10:30 மணிக்கு அலங்கார பூஜை, 11:00 மணிக்கு அன்னதானம், இரவு, 7:00 மணிக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெறும். இத்தகவலை விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.