பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
11:04
ஸ்ரீவில்லிபுத்துார்: கள்ளழகருக்கு சூட்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி, வஸ்திரம் மதுரை கொண்டு செல்லபட்டது.ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத் தின் போது அவருக்கு சூட்ட, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவைமதுரை செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கள்ளழகருக்கு சூட்ட, நேற்று பிற்பகல் 2 மணிக்கு கோயிலின் வெள்ளி கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதன் பின் ஆண்டாள் மாலை, கிளி, வஸ்திரம் ஆகியவை மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அதை ஸ்தானிகர் ரமேஷ் மதுரை கொண்டு சென்றார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, வேதபிரான்பட்டர் அனந்தராமன், சுதர்சனன், பக்தர்கள் பங்கேற்றனர்.