பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
12:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று நடந்த சித்திரை வசந்த உற்சவ விழாவில், அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீராடி, சுவாமியை வழிபட்டனர். இந்த விழா, கடந்த, 11ம் தேதி துவங்கியது. தினமும், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, தல விருட்சமான மகிழமரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அப்போது பொம்மையால் சுவாமி மீது பூச்செரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று, அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மனுக்கு, சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடத்தப்பட்டு, அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீராடி, சுவாமியை வழிபட்டனர்.