வால்பாறை : வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலின், 29ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன. காலை, 9:30 மணிக்கு கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி, திருக்கொடியை ஏற்றினார். வரும் 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பூவோடு எடுத்து வந்து, பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.