Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை ... சின்னாளப்பட்டியில் ஆற்றில் இறங்கிய அழகர் சின்னாளப்பட்டியில் ஆற்றில் இறங்கிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் அழகர்
எழுத்தின் அளவு:
அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் அழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
11:04

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர் வேடமிட்ட பெருமாள் குதிரை வாகனத்தில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் அழகரை கோவிந்த கோஷம் எழுப்பி வணங்கினர். சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏப்.20ல் வரதராஜபெருமாள், பூமாதேவி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன் தினம் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்குவதற்காக குதிரை வாகனத்தில் புறப்பட்டார். நேற்று நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி வழியாக காலை 7.15 மணியளவில் அய்யம்பாளையம் மருதா நதியில் இறங்கினார். அழகரை கோவிந்த கோஷத்துடன் பக்தர்கள் வரவேற்றனர். சர்க்கரை, அவல், பொரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். யாதவர் குல எதிர்சேவை நடந்தது. தொடர்ந்து அய்யம்பாளையம் அய்யனார் கோயிலில் தரிசனம் தந்தார். அழகர் பொட்டல் ஆயிர வைசியர் மண்டகப்படியில் நேற்று இரவு தங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று தசாவதாரம் நடக்கிறது. நாளை ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வருகிறார். நாளை மறுநாள் பூப்பல்லக்கில் சித்தரேவு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு பூப்பலக்கில் புறப்படுகிறார். வெள்ளியன்று காமதேனு வாகனத்தில் சித்தரேவில் மஞ்சள் நீராட்டுடன் நகர் வலம் வந்து கோயிலைச் சென்றடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar