திண்டிவனம்: திந்திரிணீஸ்வர் கோவிலில், திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனத்திலுள்ள பிரசித்தி பெற்ற திந்திரிணீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா, கடந்த ௧௨ம் தேதி துவங்கியது. தொடர்ந்து காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி இரவு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மணக்கோலத்தில், காட்சியளித்த சிவன்-பார்வதிக்கு ராதாகுருக்கள் தலைமையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் முரளிரகுராமன் மற்றும் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன், ஆய்வாளர் செல்வராசு, ராம்டெக்ஸ் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.