ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2016 12:04
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் சித்திரைத்திருவிழா ஏப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் நிகழ்ச்சியில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். பத்தாம் நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலி நரசிங்கப்பெருமாள் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மெயின் ரோடு வழியாக கோயிலை வலம் வந்த தேர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தக்கார் மகேந்திர பூபதி தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.