பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
12:04
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நாளை மறுநாள் (28ம் தேதி) நடக்கிறது. திருச்செங்கோடு அடுத்த, எலச்சிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில், பூச்சாற்றுதல் விழா, கடந்த, 19ம் தேதி, நடந்தது. தொடர்ந்து, 21ம் தேதி அனைத்து வீடுகளிலும் முளைப்பாரி போடப்பட்டது. நாளை (27ம் தேதி) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை விழாவும், நாளை மறுநாள் (28ம் தேதி) காலை, 7 மணிக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், தீர்த்தகுடம் எடுத்தலும், அன்று மாலை, 4 மணிக்கு மாவிளக்கு, அம்மன் பவனி வருதலும் நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவடைகிறது.