வடமதுரை: எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன், வீரநாகம்மன், கம்பிளிதாத்தப்பன், கிருஷ்ணர், ஏழு கன்னிமார், முனியப்பசுவாமி கோயிலில் சித்திரை விழா நடந்தது. ஒக்கலிகர் வெள்ளவர் குல தயாதிகளால், ஆண்டுதோறும் சித்திரை மாதம் இவ்விழா நடத்தப்படுகிறது. இதற்காக பல நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்த வந்தனர். எரியோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து மேள, தாளத்துடன் கோயிலுக்கு தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. தீர்த்த அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாவில் உணவு கூட திறப்பு விழாவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்தாண்டு முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.