கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில், சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.