பதிவு செய்த நாள்
29
ஏப்
2016
12:04
ஈரோடு: தளவாய்பேட்டை, பூங்குழலியம்மன் கோவில் பொங்கல் விழா, வரும், 4ம் தேதி நடக்கிறது. பவானியை அடுத்த தளவாய்பேட்டையில் பூங்குழலி, பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு பொங்கல் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 4ம் தேதி தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷேகம், பெரிய, சின்ன மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல், சக்தி அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. மறுநாள் (5ம் தேதி) கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைகிறது.