Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசையை முன்னிட்டு ... சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை: பக்தர்கள் குவிந்தனர்! சதுரகிரி மலையில் சித்திரை அமாவாசை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
04:05

மயிலாடுதுறை:  தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலின் தல விருட்சமானது ஐந்து வகையான இலைகளை கொண்டது.

Default Image
Next News

இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திபெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரணடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். சித்திரை மாத அமாவாசை •ßÛmk, காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வத்ததார். தொடர்ந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் பிரபல சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் அரசு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar