மதுரை : சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மாசி வீதிகளில் நேற்று இந்து மக்கள் கட்சி மற்றும் அகில பாரத இந்து மகா சார்பில் 15 விநாயகர் சிலை ஊர்வலம் வந்தது.கீழமாசிவீதியில் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன் தலைமையில், மாலை 4.10 மணிக்கு பாலசுந்தர் துவக்கி வைத்தார். தேவர் தேசிய பேரவை மாநில தலைவர் திருமாறன் சிறப்புரையாற்றினார். மாலை 5.10 மணிக்கு சிம்மக்கல் தைக்கால் பாலம் வழியாக சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு வைகையாற்றில் கரைக்க பட்டன. இன்று மாலை 5 மணிக்கு இந்து முன்னணி சார்பில் நடக்கும் 90 சிலைகள் ஊர்வலத்தை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் துவக்கி வைக்கிறார்.