Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தானங்கள் கொடுப்பது அவசியமா? வடதிசையின் அதிபதி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
05:05

ஒருவன் இதில் க்ஷணம் முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்து கொள்ளுதலாகிய அக்நி மயமான செய்கையாலேயே அவன் அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது. ஞானாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்ம ஸாத் என்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிறார்.

பாவத்தை இனிச் செய்யவில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர் தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத்தால், சிலர் பூஜையால் ஞானமெய்த முயலுகிறார்கள். ஆனால், எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாம் ஞானத்தைத் தரும். ஆனால், எந்த வழியாலே தரும்? பாவத்தைத் தீர்த்துவிடுதலாகிய வழியிலே தரும். அவற்றால் பாவம் நீங்கும். அதனால் மோக்ஷம் அல்லது அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானம் உண்டாகும். ஞானமாவது எல்லாம் கடவுள் மயமென்ற அனுபவம். பாவமாவது தனக்கெனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல். இங்ஙனமே, புண்யமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்தமான இன்பம் விளைவித்தற்குரிய செய்கை என்பது சாஸ்த்ரகோடிகளின் பரம ஸிந்தாந்தம். எல்லாம் ஆத்மா, எல்லாம் கடவுள் ஆதலால், எல்லாம் தான் என்ற ஞானத்தால் பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம் நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். நியாயம், புண்யம், அநியாயமே பாவம், ஹிதம் புண்யம்; அஹிதம் பாவம், ஸத்யம் புண்ணியம்; அஸத்யம் பாவம், திருப்தி புண்யம், துக்கம் பாவம். மரணமாவது பாவத்தின் கூலியென்று கிறிஸ்துவ வேதம் சொல்லுகிறது.

இங்ஙனம் பாவத்தைத் துறந்துவிட விரும்புவோனுக்கு மனோ நிச்சயமும், ஞான உதயமும் கதியாயின், பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்பகோணத்துக்கும், காசிக்கும் ராமேசுவரத்துக்கும் ஏன் போக வேண்டும்? என்று சிலர் வினவக் கூடும். மன மாறுதல்கள் சாசுவதமான இடத்தே விரதங்கள் என்று கூறப்படும். பெரிய சாசுவதமான ஸங்கல்பங்கள் விரதமெனப்படும். இந்த விரதங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும்பொருட்டு ஆன்றோர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில சடங்குகள் வகுத்திருக்கிறார்கள். கல்வி தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலாகலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடிபுகும்போது ஒரு சடங்கு நடத்துகிறோம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்துகொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலியென்று, கிறிஸ்துவ வேதம் செல்வதைக் கருதுமிடத்தே, அமங்களமனைத்திலும் அமங்களமானது பாவமென்று விளங்குகிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்யமென்பதும் வெளிப்படையாம். இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத்தைப் போர்த்துக் கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar