பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ராஜமாபுரம் கிராமத்தில் உள்ள, திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் மழை வேண்டி வசந்த உற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அக்னி வசந்த விழா, கடந்த மாதம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை, 150 அடி உயர துரியோதனன் சிலை அமைக்கப்பட்டு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை வீழ்த்தி, திரவுபதிஅம்மனுக்கு கூந்தலில், துரியோதனின் குருதியை தடவி, கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.