ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது பலத்த மழை பெய்வதால், ராஜபாளையம் அய்யனார்கோயில் பகுதி, சாஸ்தா கோயில் பகுதிகளில் மக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். ரேஞ்சர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்யும்போது, காட்டாற்று வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்படும் சிரமங்களை போக்க, குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளனர்,” என்றார்.