பதிவு செய்த நாள்
14
மே
2016
12:05
சுறுசுறுப்பாக பணிகளை முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!
மாத தொடக்கத்தில் புதனும், இறுதியில் சுக்கிரனும் நற்பலன் கொடுப்பார்கள். சந்திரனும் நன்மை தருவார். புதனால் நினைத்த காரியத்தை சிறப்பாக செய்யலாம். தேவையான பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூன் 3க்கு பிறகு, கிரகங்களின் நிலை அவ்வளவு சரியாக இல்லை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்னை வரலாம். மாத இறுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,
ஆனந்தமும் ஏற்படும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். தடங்கலின்றி முயற்சி நிறைவேறும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிகமாக அலைய வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் யாரை நம்பியும் பணத்தை ஒப்படைக்க வேண்டாம். ஜூன் 2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பணியாளர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். ஜூன் 3க்கு பிறகு பணி விஷயமாக குடும்பத்தை பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.
கலைஞர்கள் அதிக சிரத்தை எடுக்க வேண்டியது இருக்கும். முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மே 20க்கு பிறகு மறையும். புகழ் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம்.
மாணவர்கள் கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர்.
விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வழக்கு,விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
நல்ல நாள்: மே 14, 15, 16, 17, 18, 22, 23, 26, 27, 28 ஜூன் 2, 3, 4, 5, 11, 14, 13, 14
கவனநாள்: ஜூன் 6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். தினமும் சூரியனை வணங்கி பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.