திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுாரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பிரம்மோற்சவ விழா கடந்த ௧௩ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் மாலை சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த் வாகனம் மற்றும் கருட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன் தினம் மாலை 6.00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணன் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்று இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (௨௧ம் தேதி) காலை ௭:௩௦ மணிக்கு, திருத்தேர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகத்தா முனுசாமி மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.