காஞ்சிபுரம் சீனிவாச திருக்கல்யாணம் வைபவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2016 11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில், திருப்பதி சீனிவாச திருக்கல்யாணம், நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் அமைந்துள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயாவில், திருப்பதி சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில், கல்யாண வைபவத்திற்கான மந்திரங்கள் ஓதப்பட்டு, அக்னி வளர்த்து, சங்கல்பம் எடுத்த பின் பட்டாடை அணிவிக்கப்பட்டன. இரவு, 7:45 மணிக்கு திருமாங்கல்யத்தை ஸ்ரீதேவி, பூதேவியருக்கு பட்டாச்சாரியார் அணுவித்தார். தீபாராதனை முடிந்த பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.