பதிவு செய்த நாள்
25
மே
2016
12:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கம்பம் நடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. நிகழ்ச்சியில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. கரூர் பாலம்மாள்புரத்தில் இருந்து கம்பம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்து சென்று, ஆற்றில் சிறப்பு அபி?ஷகம், பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின் ஆற்றில் இருந்து ஊர்வலமாக கம்பம் எடுத்து வந்து கோவிலில் நடப்பட்டது. கடந்த, மூன்று நாட்களாக மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று, மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல், 26ம் தேதி இரவு, 7 மணிக்கு புஷ்ப விமானம், 27ம் தேதி இரவு, 7 மணிக்கு கருட வாகனம், 28ம் தேதி இரவு, 7 மணிக்கு மயில் வாகனம் ஊர்வலம் நடக்கிறது. கம்பம் விடும் நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உளளனர்.