Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தராபுரம் நாக காளியம்மன் கோவில் ... சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் உற்சவ திருவிழா சின்னவாளவாடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
8 ஆண்டுகளுக்குப்பின் சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
8 ஆண்டுகளுக்குப்பின் சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

26 மே
2016
11:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, 18 கிராமங்களில் கொண்டாடும் சூலக்கல் மாரியம்மன் கோவில், மூன்று நாள் ÷ தர்திருவிழா இன்று துவங்குகிறது.  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் புகழ் பெற்றது சூலக்கல் மாரிம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு÷ தாறும் நடந்து வந்த தேர்திருவிழா, கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடப்பதில்லை. புதிதாக, 27 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட திருத்தேர்  தயாரிக்கப்பட்டு, கும்பாபிஷேக நாளில் கோவிலைச் சுற்றி வெள்ளோட்டம் விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். மே 9ம்  தேதி திருத்தேர் திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, கடந்த 10ம் தேதி இரவு, பூச்சாட்டு விழாவும், 17 ம் தேதி இரவு பூவோடு  எடுத்தலும், கம்பம் நடுதலும் நடந்தன. கடந்த 18 ல், யாகசாலை ஆரம்பிக்கப்பட்டு, கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும்  சப்பரம், சிம்மவாகனம், குதிரை வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், பூவோடு எடுத்தலும் இடம்பெற்றன.

நேற்று காலை, 6.00 மணி அளவில் மாவிளக்கு எடுத்தலும், பொங்கலிடுதலும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ÷ நற்று மாலை அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.  இன்று (மே 26) அதிகாலை, 5.00 மணி அளவில் மாரியம்மன், விநாயகர் தெய்வங்கள் திருத்தேர்  வலம் செல்ல புறப்படுகின்றனர். மாலை, 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. கோவில் அலுவலர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள்  வடம்படித்து, தேர் இழுத்தலை துவக்குகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் தேரோட்டத்தின் நிறைவு நாளான, வரும், 28 ம்தேதி திருத்தேர்  நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. அன்றே கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், வரும் 29ம் தேதி மகா அபிஷே கத்துடன் தேர்திரு விழா நிறைவு பெறுகிறது. மூன்று நாள் நடக்கும் இத்திருவிழா, சூலக்கல் கிராமத்தில் மட்டுமல்ல, புரவிபாளையம் ஜமீனுக்கு உட்பட்ட 8 கிராமங்கள்  மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 10 கிராமங்கள் என, 18 கிராமங்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன.  சூலக்கல் தவிர மற்ற கிராமங்களில், சூலக்கல்  மாரியம்மனை எதிர்கொண்டு மாவிளக்கு எடுத்தும், கிடா வெட்டியும் மக்கள் வழிபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar