கரூர் மாரியம்மன்கோவில் திருவிழா: போலீசார் கெடுபிடி; மக்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2016 12:05
கரூர்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் போலீசாரின் கெடுபிடியால், பக்தர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 15 நாட்களாக பொதுமக்கள் அம்மன் கோவில் முன் உள்ள கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர். இறுதி நாளான நேற்றுமுன்தினம் மாலை கம்பத்தைக் கொண்டு சென்று அமராவதி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜவஹர் பஜாரிலிருந்து மாரியம்மன் கோவில் செல்லும் வழி, சி.எஸ்.ஐ., சர்ச் கார்னர் பகுதி, லைட்ஹவுஸ் கார்னர் பகுதி, ஐந்து ரோடு பகுதியில் இருந்து பக்தர்கள் கோவிலுக்குள் குவிந்து விடாமல் இருக்க, பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் ஒழுங்குபடுத்தினர். சில போலீசார் கெடுபிடிகள் காரணமாக, பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பரிதவித்தனர்.பக்தர்களை முறைப்படுத்தி ஒரு வழியில் சென்று மறுபுறம் செல்லும் வழியில் அனுமதித்திருக்க வேண்டும். முறையான பாதுகாப்பு இல்லாததால், அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு நடந்தது குறிப்பிடத்தக்கது.