பதிவு செய்த நாள்
27
மே
2016
12:05
மல்லசமுத்திரம்: வேலணம்பாளையம் முத்துமுனியப்பன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு தாலுகா, ராமாபுரம் அடுத்த, வேலணம்பாளையம் முத்துமுனியப்பன் கோவிலில் நேற்று, திருவிழா நடந்தது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழாவின் போது, அர்த்தநாரீஸ்வரர் மழைக்கு சென்ற நாளில், முத்துமுனியப்பன் கோவிலில் திருவிழா நடக்கும். இதில் வேலணம்பாளையம், பருத்திபள்ளி ராமாபுரம், வண்டிநத்தம், வண்ணத்தம் போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்தும், சேவல், கிடா வெட்டியும் விழா நடந்தது. இரவு, 7 மணிக்கு, பருத்திபள்ளியில் இருந்து, முத்துமுனியப்பன் கோவிலுக்கு முப்போடு அழைத்து வந்தனர். இதில் வாணவேடிக்கை, வண்டி வேஷம், புலி வேஷம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.