ராசிபுரம்: ராசிபுரம் - புதுப்பாளையம் சாலை, எல்லை மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 25ம் தேதி இரவு அக்னிகுண்டம் பற்ற வைக்கப்பட்டது. நேற்று காலை, 7 மணிக்கு பக்தர்கள் தீ மதித்தனர். இன்று மதியம், 2 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை, 6 மணிக்கு பெண்கள் பங்கு கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு மேல், சத்தாபரணம் நடக்கிறது.