புதுச்சேரி: முதலியார்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முதலியார்பேட்டை திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபி ஷேகம் மற்றும் மகா தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மதியம் படுகள நிகழ்ச்சியும், மாலை தீ மிதி திருவிழாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், தெப்பல் திருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.