கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி: பழநி அருகே பெரியகலையம்புத்துார் ஐகோர்ட் பத்ர காளியம்மன்கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துார் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழாவை முன்னிட்டு மே 27ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், பூஜைகள் நடந்துவந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி இறங்கும் விழாவில் பெரியவர், பெண்கள், சிறுவர், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கினர். பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதேபோல மாவிளக்கு எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், நுாற்றுக்கு மேற்பட்டவர்கள் கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.