பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
திருப்பதி: மத்திய அரசின் ரேடியோ ஒலிபரப்பான, ஆகாசவாணியில், ஏழுமலையான் சுப்ரபாத சேவை மீண்டும் துவங்கியது. திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: கடந்த, 2006ல், ஆகாசவாணியில் ஒலிபரப்பாகி வந்த, ஏழுமலையான் சுப்ரபாத சேவை தவிர்க்க முடியாத காரணங்களால், நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் துவக்க பக்தர்கள், கோரிக்கை விடுத்தனர். இதனால், ஆகாசவாணி அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று அதிகாலை, 3:00 மணி முதல், -3:30 மணி வரை சுப்ரபாதம்; 4:00 மணி முதல், -4:30 மணி வரை தோமாலை; 4:45 முதல், -5:30 மணி வரை அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளின் நேரடி ஒலிபரப்பு துவங்கியது. இதற்கு கட்டணமாக, ஆகாசவாணிக்கு தேவஸ்தானம், ஆண்டுக்கு, 11 லட்சம் ரூபாய் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.