விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பிடாகம் வரதராஜபெருமாள் கோவில் பக்தர்கள், திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர். பிடகாம் வரதராஜபெருமாள் கோவிலில் துவங்கிய பாதயாத்திரைக்கு ஜானகிராமன் பாகவதர் தலைமை தாங்கினார். வரதராஜ பாகவதர், ஆறுமுக பாகவதர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி, அர்ச்சகர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுமார் 50க்கும் மேற்பட்டோர், துளசி மாலை அணிந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றனர்.