தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, கொண்டையம்பள்ளி கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலில், வைகாசி தேர் திருவிழா நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம், அலங்கரிக்கப்பட்ட தேரில், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதி உலா வந்தார். அதில், கொண்டையம்பள்ளி, நாகியம்பட்டி, தம்மம்பட்டி, கூடமலை கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபாடு செய்தனர்.